கலை விழாவில் உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை

காரைக்கால் மாவட்டத்தில் ஆகஸ்டு 15, 16-ந் தேதி நடக்கும் கலைவிழாவில் உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா கூறினார்.;

Update:2023-07-31 22:51 IST

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் ஆகஸ்டு 15, 16-ந் தேதி நடக்கும் கலைவிழாவில் உள்ளூர் கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா கூறினார்.

கலைவிழா

புதுவை மாநிலத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் உள்ளூர் மற்றும் வெளியூர் கலைஞர்கள் பங்கேற்கும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கலைவிழா கலை பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து சார்பில் ஆகஸ்டு 15, 16-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த கலைவிழா காரைக்கால் மாவட்டத்திலும் நடத்தப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் காரைக்காலில் கலைவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கி னார். கூட்டத்தில், கலைவிழாவில் பங்கேற்கும் வெளியூர் கலைஞர்களின் பாதுகாப்பு, தங்கும் இடம், உணவு வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிறப்பாக நடத்தவேண்டும்

அப்போது பேசிய அமைச்சர் சந்திரபிரியங்கா, 'கலைவிழாவில் வெளியூர் கலைஞர்கள் போல் உள்ளூர் கலைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். 2 நாள் விழாவில் முதல்நாள் கடற்கரை சாலையிலும், 2-வது நாள் பூவம் பகுதியிலும் நடத்தப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கலை விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யவேண்டும்' என்றார்.

கூட்டத்தில் கலெக்டர் குலோத்துங்கன், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ், துணை கலெக்டர் ஜான்சன், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் மற்றும் பொதுப்பணித்துறை, நலவழித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்