ஆயுள் தண்டனை கைதிகள் 9 பேரை விடுவிக்க முடிவு

புதுவையில் ஆயுள் தண்டனை கைதிகள் 9 பேரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-20 18:04 GMT

புதுச்சேரி

புதுவையில் ஆயுள் தண்டனை கைதிகள் 9 பேரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதிகள்

புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலை 250-க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 14 ஆண்டுகளை தாண்டி சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது வழக்கம்.

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் 14 ஆண்டுகளை தாண்டிய நிலையிலும் சிலர் விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருந்து வருகின்றனர். எனவே அவர்களை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று மதியம் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, புதுச்சேரி தலைமை நீதிபதி செல் வநாதன், சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப் சிங் சாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

9 பேரை விடுவிக்க முடிவு

இந்த கூட்டத்தில், ஆயுள் தண்டனை பெற்று 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள நலலவாடு பகுதியை சேர்ந்த 8 பேரும், காரைக்காலை சேர்ந்த ஒருவரும் என 9 பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கான கோப்பு சிறைத்துறை சார்பில் தயாரித்து கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், கவர்னர் அனுமதி அளித்தவுடன் அவர்கள் 9 பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்