நேரு சிலைக்கு தலைவர்கள் மரியாதை

நேரு நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2022-05-27 14:21 GMT

புதுச்சேரி

நேரு நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சிலைக்கு மாலை

புதுவை அரசு சார்பில் இன்று முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரையில் உள்ள நேரு சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலைக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி.ரமேஷ், செய்தித்துறை இயக்குனர் வினயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியினர் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தலைமையில் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீல.கங்காதரன், அனந்தராமன், கார்த்திகேயன், நிர்வாகிகள் வீரமுத்து, இளையராஜா, ரகுமான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் நேருவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்