லட்சுமி ஹயக்ரீவர் கோவில் தேரோட்டம்

முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேரோட்டம் நடைப்பெற்றது.;

Update:2023-08-29 22:26 IST

புதுச்சேரி

முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணாநகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்