குறுவை பருவ நெல் சாகுபடி கருத்தரங்கம்

கரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை பருவ நெல் சாகுபடி கருத்தரங்கம் நடைப்பெற்றது.;

Update:2023-06-16 23:21 IST

மாதூர்

கரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை பருவ நெல் சாகுபடியில் உயர் விளைச்சலுக்கான உன்னத தொழில்நுட்பங்கள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. முதல்வரும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் கருத்தரங்கை தொடங்கி வைத்து, விவசாயிகள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ற புதிய வேளாண் தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் என்றும், காவிரி நீர் காரைக்கால் மாவட்டத்திற்கு வருவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களாக ஆகும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நெல் சாகுபடியை ஆரம்பித்து விட வேண்டும். என்றார்.

தொடர்ந்து, ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இணைப்பேராசிரியை (உழவியல்) நாகேஸ்வரி, பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் (உழவியல்) திருமேனிநாதன், விஞ்ஞானி ஸ்ரீதேவசேனா, குஜராத் ஐ.சி.ஏ. ஆர்.நிர்வாகி ஆனந்த் ஆகியோர் நெல்லில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை என்ற தலைப்பிலும் மற்றும் வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் திவ்யா, அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். இறுதியாக, பங்குபெற்ற விவசாயிகளுக்கு இடையே குறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் சம்பந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்