ரூ.4,500 போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு
ஏ,டி.எம். எந்திரத்தில் தவறவிட்ட ரூ.4,500 போலீசில் ஒப்படைத்த வாலிபருக்கு போலீசார் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்
வில்லியனூர்
புதுச்சேரி கொம்பாக்கம் அண்ணாமலையார் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவசண்முகம் (வயது 28). இவர் கொம்பாக்கம்-வில்லியனூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் வெளியே வந்தபடி ரூ.4,500 இருந்தது. யாரோ பணத்தை தவற விட்டதை உணர்ந்த அவர் உடனே அந்த பணத்தை எடுத்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலைய்யனிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க வங்கி மேலாளரிடம் கொடுக்கப்பட்டது. சிவசண்முகத்தின் நேர்மையை போலீசார் பொன்னாடை அணிவித்து வெகுவாக பாராட்டினர்.