வில்லியனூர்
வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் தமிழ்வாணன். இவரது மகள் மாலினி (வயது 15), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டனர். மறுநாள் காலை தமிழ்வாணன் எழுந்து பார்த்தபோது, மகளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து வில்லியனூர் போலீசில் தமிழ்வாணன் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாலினிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும், எனவே அவர் மாணவியை கடத்தி சென்றிருக்கலாம் என்றும் கூறப் படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, மாணவி மற்றும் ரவுடியை தேடி வருகின்றனர்.