கந்தூரி விழா கொடியேற்றம்

காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லா தர்காவில் கந்தூரி விழா வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;

Update:2023-02-27 22:00 IST

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 200-வது கந்தூரி விழா வரும் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வருகிற 11-ந் தேதி இரவு ஹலபு எனும் போர்வை வீதியுலா, சந்தனக்கூடு புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து 12-ந்தேதி அதிகாலை சந்தனம் பூசுதல், 14-ந் தேதி கொடியிறக்கம் நடக்கிறது.

விழாவையொட்டி, தர்கா வளாகத்தில் ரதம் மற்றும் பல்லக்கு தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா குறித்து புதுச்சேரி வக்பு வாரிய உறுப்பினர் முகமது ஜாஹிர் உசேன் நிருபர்களிடம் கூறுகையில் '200-வது கந்தூரி விழா என்பதால் சிறப்பு நூல் வெளியிடப்படுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்