ஊர்க்காவல் படையினர் பல்நோக்கு ஊழியர்களாக பணிநிரந்தரம்

ஊர்க்காவல் படையினர் பல்நோக்கு ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்யப்பட்டது. இதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

Update: 2022-05-20 18:22 GMT

புதுச்சேரி

புதுவை ஊர்க்காவல் படையில் பணிபுரியும் 45 ஆண்கள், 50 பெண்கள் புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின்கீழ் பல்நோக்கு பணியாளர்களாக பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், நிர்வாக சீர்திருத்தத்துறையின் செயலாளர் அருண், சார்பு செயலாளர் கண்ணன், கண்காணிப்பாளர் கருணாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்