காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

Update: 2022-07-11 17:37 GMT

காரைக்கால்

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

மாங்கனி திருவிழா

சிவபெருமான் திருவாயால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான முறையில் நடந்த விழா இந்த ஆண்டு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. முன்னதாக, பரமதத்த செட்டியார், ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை கோலத்தில் ஊர்வலமாக புறப்பட்டு காரைக்கால் அம்மையார் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிச்சாண்டவர் வீதியுலா

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடும், நாளை மறுநாள் (புதன்கிழமை) பிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சாமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலாவும், அதுசமயம் நேர்த்திக்கடனாக பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்