சார்பதிவாளருக்கு இடைக்கால ஜாமீன்

புதுவை கோவில் நில மோசடி வழக்கில் கைதான சார்பதிவாளருக்கு கோர்ட்டு இடைக்கால ஜாமீன் அளித்தது.

Update: 2023-07-04 17:49 GMT

புதுச்சேரி

புதுவை பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து சார்பதிவாளர் சிவசாமி பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள சிவசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அவரது வலது கால் சுண்டு விரல் அகற்றப்பட்டது. எனவே அவரை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து சிவசாமி ஜாமீன் கேட்டு புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி விசாரித்து சிவசாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினார். வருகிற 18-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்