இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் 3 ஆண்டு சம்பள உயர்வு ரத்து

சிறுமி கூட்டு பலாத்காரம் செய்ததை காலதாமதமாக வழக்குப்பதிவு செய்து அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரின் 3 ஆண்டு சம்பள உயர்வை போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-04-28 17:27 GMT

புதுச்சேரி

சிறுமி கூட்டு பலாத்காரம் செய்ததை காலதாமதமாக வழக்குப்பதிவு செய்து அலட்சியமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரின் 3 ஆண்டு சம்பள உயர்வை போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

போக்சோ வழக்கு

புதுவை திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த வாலிபர், 16 வயது சிறுமியை கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் திருக்கனூருக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக அப்போதைய திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கில்டா சத்திய நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் உடனடியாக விசாரித்து வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு நித்தின் கவுல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன்படி அவர் விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிக்கை சமர்பித்தார். அப்போது கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்ததும், சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் போலீசார் இருந்தது தெரியவந்தது.

சம்பள உயர்வு ரத்து

இதையடுத்து கால தாமதமாக வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கில்டா சத்ய நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோரின் 3 வருட சம்பள உயர்வை போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த தகவல் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்