இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
அரசு ஆஸ்பத்திரிகளை மேம்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் தரமான உயர்தர சிகிச்சை அளித்திட வேண்டும், அவசர சிகிச்சை பிரிவு, விபத்துகால சிகிச்சை, எலும்பு முறிவு, இருதய நோய் சிகிச்சை, பொது மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் கூடுதலாக சிறப்பு டாக்டர்களை நியமிக்கவேண்டும், மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரியை மேம்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், நிர்வாகிகள் அபிசேகம், கீதநாதன், சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.