இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
புதுச்சேரி
புதுவை தேங்காய்திட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. சுத்தமான குடிநீரும் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தேங்காய்திட்டு மேட்டுத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி தேங்காய்திட்டு தலைவர் கோபால்சாமி முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.