கோர்ட்டில் சுதந்திர தினவிழா
புதுச்சோியில் கோாட்டில் சுதந்திர தின விழாவையொட்டி தலைமை நீதிபதி செல்வநாதன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி
புதுவை கோர்ட்டில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை நீதிபதி செல்வநாதன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் இளவரசன், ஷோபனாதேவி, மோகன், அம்பிகா, ஜெயசுதா, ராஜசேகர், வக்கீல் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
புதுவை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் துணைவேந்தர் குர்மீத்சிங் தேசியக்கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். நிகழ்ச்சியில் கல்வி இயக்குனர் தரணிக்கரசு, பதிவாளர் அமராஷ் சமந்தராயா, நிதி அதிகாரி லசார், தேர்வு கட்டுப்பாட்டாளர் சதநாத சுவாமி உள்பட புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.