சூரியகாந்தி பயிருக்கும் ஊக்கத்தொகை

காரைக்கால் மாவட்ட கடைமடை பகுதி விவசாய சங்க தலைவர் சூரியகாந்தி பயிருக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2023-07-04 21:25 IST

காரைக்கால்

காரைக்கால் மாவட்ட கடைமடை பகுதி விவசாய சங்க தலைவர் சுரேஷ்,  முதல்-அமைச்சர் மற்றும் வேளாண் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

திருநள்ளாறு அடுத்துள்ள செல்லூர் கிராமத்தில், மத்திய அரசு மாற்றுப்பயிர் திட்டத்தின் கீழ் சூரியகாந்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சூரிய காந்தி விதை தற்போது நன்றாக வளர்ந்து, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சூரிய காந்தி விதையை நல்ல விலைக்கு விற்க முடியும். ஆனால் சிறிய அளவில் மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளதால் இதை வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வர மறுக்கிறார்கள். நாமாக சென்று வழங்கினால், குறைந்த விலையில் தான் வாங்குகின்றனர்.

காரைக்காலில் மாற்றுப்பயிராக சூரியகாந்தி நன்றாக விளைச்சல் அடைகிறது. எனவே கோடைக்கால பயிருக்கு அனைத்து விவசாயிகளுக்கும் சூரிய காந்தி விதையை மானியவிலையில் வழங்க வேண்டும். அதுபோல் சூரியகாந்தி விதையை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். முக்கியமாக, நெல்லுக்கு வழங்குதைப்போல் சூரியகாந்தி உள்ளிட்ட மாற்றுப்பயிர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்