கோடை வெப்பத்தின் தாக்கம்; புதுச்சேரியில் பீர் விற்பனை 40% உயர்வு

சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் பீர் வாங்கிச் செல்வதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.;

Update:2023-04-27 17:07 IST

புதுச்சேரி,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க மக்கள் இளநீர், நுங்கு, மோர், குளிர்பானங்கள் ஆகியவற்றை நாடிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் கோடை காலத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை வெப்பம் காரணமாக மதுப்பிரியர்கள் தற்போது பீரையே அதிக அளவில் நாடுவதாகவும், பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் பீர் வாங்கிச் செல்வதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் புதுச்சேரியில் தற்போது பீர் விற்பனை 40% அதிகரித்துள்ளது. அங்கு வழக்கமாக ஒரு மாதத்திற்கு 2 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 2.5 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்