பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி
புதுவை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்றது.;
புதுச்சேரி
புதுச்சேரி அரசு தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக தவளகுப்பத்தில் உள்ள செயின்ட் ஜோசப் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரி மதுமிதா தலைமை தாங்கினார். சுகாதாரப் பெண் மேற்பார்வையாளர் பவுனம் பால் முன்னிலை வகித்தார். தாளாளர் ராமு வரவேற்று பேசினார். சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை பார்வையிட்டார்.. இதில் சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜவகர், இளஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தினர்.
பள்ளியில் மாணவர்களுக்கு கக்குவான் இருமல், ரணஜனி ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி வழங்கப்படுகின்றன. இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு உயிர் கொல்லி நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்றன. 5 முதல் 16 வயது நிரம்பியவர்களுக்கு முத்தடுப்பு ஊசிகளான ரணஜனி, கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் தடுப்பூசி போடப்படுகிறது.