சமூக நல்லிணக்க மனித சங்கிலி

காரைக்காலில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.;

Update:2022-10-02 21:41 IST

காரைக்கால்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காரைக்காலில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. காரைக்கால் பஸ் நிலையம் அருகே தொடங்கிய இந்த மனித சங்கிலி, நகர காவல் நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நீடித்தது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக.தியாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு செயலாளர் வணங்காமுடி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சந்திரமோகன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விண்சென்ட், ம.ம.க. ராஜாமுகம்மது மற்றும் நாம் தமிழர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், புதுச்சேரியில் மின்துறை தனியார் மயம் ஆக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்