புனித தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத்திருவிழா
காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயத்தின் ஆண்டுத்திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
காரைக்கால்
காரைக்காலில் 133 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித தேற்றரவு அன்னை ஆலயம் காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டுத்திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஆலயத்தில் இருந்து ஜெபித்து எடுத்துவரப்பட்ட மாதா கொடியை, பங்கு மக்களால் ஊர்வலமாக சுமந்துவரப்பட்டது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு மாவட்ட முதன்மை பங்குத்தந்தை ஜோசுவா தலைமையில் கோணாங்குப்பம் பெரியநாயகி திருத்தல அதிபர் தேவசகாயராஜ் கொடி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பங்கு குருக்கள் பீட்டர் பால், பால்ராஜ்குமார், ஜெயபாலன், பாளையங்கோட்டை திசை ஜெர்ரி மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவில் ஆகஸ்டு 15-ந் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், மின் அலங்கார தேர்பவனியும் நடக்கிறது.