மேல்நிலை எழுத்தர்கள் உண்ணாவிரதம்

தேர்வு இல்லாமல் பதவி உயர்வு வழங்கக்கோரி மேல்நிலை எழுத்தர்கள் உண்ணாவிரதம் இ்ருந்தனர்.

Update: 2023-07-28 16:23 GMT

புதுச்சேரி

தேர்வு இல்லாமல் பதவி உயர்வு வழங்கக்கோரி மேல்நிலை எழுத்தர்கள் உண்ணாவிரதம் இ்ருந்தனர்.

போட்டி தேர்வுக்கு எதிர்ப்பு

புதுவையில் அரசு துறைகளில் உதவியாளர் பணியிடங்களை பணிமூப்பு அடிப்படையில் நிரப்பவேண்டும் என்று மேல்நிலை எழுத்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே துறை ரீதியிலான போட்டித்தேர்வு மூலம் இந்த பணியிடங்களை நிரப்ப புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை ஒருங்கிணைந்த பணியாளர் சேவை மற்றும் நலச்சங்கத்தினர் இன்று புதுவை சட்டசபை அருகே உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்துக்கு சங்க பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பதவி உயர்வு

போராட்டத்தின்போது, கடந்த 2013-ம் ஆண்டு பணியில் அமர்த்தப்பட்ட தாங்கள் (119 பேர்) பணியில் சேர்ந்து 10 வருடம் ஆகிவிட்டதால் தேர்வு எழுத செய்யாமல் பதவி உயர்வு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் மேல்நிலை எழுத்தர்கள் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்