தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் முதுகு தண்டுவட பிரச்சினையால் உள்நோயாளியாக பாதிக்கப்பட்டிருந்த பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புதுச்சேரி
விழுப்புரம் மாவட்டம் எடையஞ்சாவடி செல்லியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 39). பெயிண்டரான இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிசோதனையில் அவர் முதுகு தண்டுவட பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மாதம் அவர் கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.