தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
லாஸ்பேட்டில் தாய் இறந்த சோகத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி
லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சக்திமுருகன் (வயது 54). கார் டிரைவர். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். எனவே சக்திமுருகன் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சக்திமுருகனின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் சோகத்தில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சக்திமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.