தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-10-12 16:10 GMT

நெடுங்காடு

காரைக்காலில் செல்போன்களை தவற விட்டாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ உடனடியாக அந்தந்த போலீஸ் நிலையத்தில் அல்லது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவ்ஹால் ரமேஷ், சுப்பிரமணியம் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையில் நெடுங்காடு பகுதியை சோ்ந்தவர்கள் தங்களது செல்போன்களை தவறவிட்டது தொடா்பாக போலீசில் புகார் அளித்தனர். அதன்போில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் தொலைந்து போன செல்போன்களின் ஐ.எம்.இ. எண்களை வைத்து விசாரணை நடத்தி, மீட்டனர். இந்த செல்போன்கள் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்