மூதாட்டி தற்கொலை

கையில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-02 18:02 GMT

புதுச்சேரி

ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ராணி (வயது55). இவரது தாயார் கந்தம்மாள் (77). இவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர் வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்