பணம் கேட்டு மிரட்டிய பட்டதாரி வாலிபர் கைது
புதுவையில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, பணம் கேட்டு மிரட்டிய பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
புதுச்சேரி
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 31 வயது பெண்ணின் செல்போனுக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. எதிர்முனையில் செய்தி அனுப்பிய நபர், அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பினார். மேலும் அந்த நபர், தங்களின் ஆபாசபடம் நிறைய இருப்பதாகவும், அதனை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.8 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டினார். உடனே அந்த பெண்ணும் ரூ.8 ஆயிரத்தை அனுப்பி வைத்தார்.
மேலும் அந்த நபர், தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததார். இதுகுறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி சென்னையை சேர்ந்த பட்டதாரியான விக்னேஷ் (வயது26) என்பவரை கைது செய்தனர்.