அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்

புதுவை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2023-08-01 16:37 GMT

புதுச்சேரி

புதுவை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

கூண்டோடு இடமாற்றம்

புதுவை அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்தநிலையில் புதுவை அரசு ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது புதுவை பிராந்தியத்தில் பணியாற்றும் 119 தலைமை ஆசிரியர்களில், மாகியில் 2 பேரும், ஏனாமில் 6 பேரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பதவி உயர்வு

மேலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுவையில் 14 பேரும், மாகி, ஏனாமில் தலா ஒருவரும் என 16 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷிணி வெளியிட்டுள்ளார்.

மேலும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான (கணிதம்) கலந்தாய்வு வியாழக்கிழமையும்,வெள்ளிக்கிழமையும் நடக்கிறது. இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியான ஆசிரியர்களின் பட்டியலையும் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 270 பட்டதாரி ஆசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்