கவர்னர், அமைச்சர் ஏனாம் பயணம்

வெள்ள பாதிப்பை பார்வையிட நாளை கவர்னர், அமைச்சர் ஏனாம் ெசல்கிறாா்கள்.

Update: 2022-07-18 17:32 GMT

புதுச்சேரி

கோதாவரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனாம் தண்ணீரில் தத்தளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் 5 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கலெக்டர் வல்லவன் ஏனாமில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் வெள்ளசேதங்களை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தலின்பேரில் அமைச்சர் லட்சுமிநாராயணன் நாைள மாலை ஏனாம் புறப்பட்டு சென்றார். அவர்கள் நாைள (செவ்வாய்க்கிழமை) வெள்ளசேதங்களை பார்வையிடுகிறார்.மேலும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் நாளை ஏனாம் செல்கிறார். ஏனாமில் சேத விவரங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்