பக்ரீத் பண்டிகைக்கு விற்பனைக்கு வந்த ஆடுகள்
புதுவையில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.;
புதுச்சேரி
புதுவையில் பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
பக்ரீத் பண்டிகை
இஸ்லாமியர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த நாட்களில் ஆடுகளை பலியிட்டு அக்கம்பக்கத்தினருக்கு வழங்கி கொண்டாடுவார்கள்.
இந்த நாட்களில் ஆடுகள் விற்பனை என்பது அதிகமாக இருக்கும். குறிப்பாக கொம்புகள் பெரியதாக உள்ள ஆடுகளை இஸ்லாமியர்கள் விரும்பி வாங்குவார்கள். இதற்காகவே சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
ரூ.25 ஆயிரம் வரை...
பக்ரீத் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில் (29-ந் தேதி) புதுவையிலும் ஆடு விற்பனை அதிகரித்து வருகிறது. தமிழக பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் புதுவைக்கு ஆடுகளை ஓட்டி வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆடு உயிருடன் 1 கிலோ எடைக்கு ரூ.500 என்ற விலை நிர்ணயம் செய்து விற்பனை ஆனது. அதாவது அதிகபட்சமாக ஒரு ஆடு ரூ.25 ஆயிரம் விரை விற்பனை ஆனது.
இதுதொடர்பாக ஆடு வியாபாரி அப்துல் கூறியதாவது:-
உளுந்தூர்பேட்டை
பக்ரீத் பண்டிகைக்காக 10 நாட்களுக்கு முன்பே பலர் எங்களுக்கு ஆடு கேட்டு முன்பணம் கொடுத்துள்ளனர். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட அருகில் உள்ள தமிழக பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம்.
பெரிய கொம்புடைய ஆடுகளுக்கு சற்று கூடுதல் கிராக்கி இருக்கும். உயிருடன் உள்ள ஆடுகளை கிலோ ரூ.480 வரை விற்பனை செய்கிறோம். நான் இப்போது 60 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.