விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
பாகூர், கிருமாம்பாக்கம் பகுதிகளில் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.;
பாகூர்
பாகூர், கிருமாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இளைஞர்கள், பொதுமக்கள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இந்த சிலைகள் கடந்த 20, 22-ந் தேதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. மீதமிருந்த சிலைகள் இன்று கடலில் கரைக்கப்பட்டன. பாகூர் பகுதியில் இருந்து விநாயகரை ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து வந்து மு.புதுகுப்பம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து படகில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. இன்று மட்டும் கிருமாம்பாக்கம், பாகூர் பகுதியில் இருந்து 24 சிலைகள் கரைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் அசம்பாவிதம் எதும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.