இலவச டயாலிசிஸ் முறையை தொடங்கவேண்டும்

இலவச டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் உடனடியாக தொடங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் வலியுறுத்தினார்.

Update: 2023-07-25 17:09 GMT

புதுச்சேரி

இலவச டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் உடனடியாக தொடங்கவேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் வலியுறுத்தினார்.

குஜராத் டயாலிசிஸ்

குஜராத் மாநிலத்தில் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையை புதுவையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் கவர்னர் மாளிகையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, நிதித்துறை செயலாளர் ஜவகர், கவர்னரின் செயலாளர் அபிஜித் விஜய்சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

குஜராத்தில் இருந்து டாக்டர் வினித் மிஷ்ரா தலைமையிலான குஜராத் சிறுநீரக நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ அதிகாரிகள் குழு காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்றது.

அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

உடனடியாக தொடங்க...

வெற்றிகரமாக நடைபெற்று வரும் குஜராத் மாதிரி டயாலிசிஸ் முறையை புதுவையில் உடனடியாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு உடனடியாக டயாலிசிஸ் திட்டத்தை தொடங்கவேண்டும். முதலில் புதுச்சேரியிலும், அதைத்தொடர்ந்து காரைக்காலிலும் தொடங்க வேண்டும். டயாலிசிஸ் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்