முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

முத்தியால்பேட்டை மது பாரை சூறையாடியதில் போலீசார் 7 பேரை கைது செய்தது உள்பட முன்னாள் எம.எல்.ஏ மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Update: 2022-12-24 17:09 GMT

புதுச்சேரி

புதுவை முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன்கோவில் அருகே ரெஸ்டோ பார் திறக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இரவு முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் அந்த பாருக்குள் புகுந்து சூறையாடினர்.

இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் உள்பட பலர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விநாயகம், சரவணன், பிரசாந்த், மகி, வினோத், சக்திவேல், ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று அங்கு ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் அங்கு கூடினார்கள். ஆனால் அவர்களது போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம் மற்றும் நிர்வாகிகள் முருகன், சரவணன் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்