தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பள நிர்ணயம்

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்வதில் தொழிலாளர்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

Update: 2023-08-17 17:12 GMT

புதுச்சேரி

தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்வதில் தொழிலாளர்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

வேதிப்பொருட்கள்

புதுவையில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிப்பதில் தொழிலாளர்துறை முனைப்பாக உள்ளது. தற்போது ஊழியர்களுக்கான வரைவு சம்பள பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதன்படி வேதிப்பொருட்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றம் தொழில்நுட்ப மேலாளருக்கு மாதம் ரூ.17 ஆயிரத்து 750, என்ஜினீயருக்கு ரூ.17 ஆயிரத்து 250, மேற்பார்வையாளருக்கு ரூ.16 ஆயிரத்து 850, பாதுகாப்பு அதிகாரிக்கு ரூ.16 ஆயிரத்து 850, ஊழியர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல் ஊழியர்கள்

சோப்பு தயாரிக்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.613 முதல் ரூ.633 வரையிலும் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கியாஸ் நிறுவனங்களில் பணியாற்றும் மேலாளருக்கு மாதம் ரூ.11 ஆயிரத்து 351-ம், மெக்கானிக்குகளுக்கு ரு.10 ஆயிரத்து 887-ம், டிரைவருக்கு ரூ.10 ஆயிரத்து 944-ம் சம்பளம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் பணியாற்றும் சமையல்காரர், வரவேற்பாளர், மேற்பார்வையாளர், கணக்காளர், பிரியாணி மாஸ்டர் என பல்வேறு பிரிவு ஊழியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரத்து 787-ல் இருந்து ரூ.13 ஆயிரத்து 14 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் கம்பெனிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.13 ஆயிரத்து 783 முதல் ரூ.18 ஆயிரத்து 159 வரை சம்பளம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சேபனைகள்

இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 60 நாட்களுக்குள் தொழிலாளர்துறை செயலாளரிடம் தெரிவிக்கலாம். இதற்கான உத்தரவினை தொழிலாளர் துறை சார்பு செயலாளர் ராகிணி வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்