தூக்குப்போட்டு பெண் தற்கொலை
புதுவையில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியாங்குப்பம்
புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 45). இவர் சாரம் பகுதியில் உள்ள புள்ளியல் துறையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி லலிதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து லலிதா தவளக்குப்பத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இருப்பினும் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.