தொழிலதிபருக்கு பெண் தாதா கொலைமிரட்டல்

பெண் தாதா கொலை மிரட்டல் விடுத்ததன் எதிரொலியாக தொழில் அதிபர் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update:2023-08-20 21:37 IST

காரைக்கால்

பெண் தாதா கொலை மிரட்டல் விடுத்ததன் எதிரொலியாக தொழில் அதிபர் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெண் தாதா

காரைக்காலை சேர்ந்தவர் பிரபல பெண் தாதா எழிலரசி. இவர் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சிவக்குமார், தொழிலதிபர் ராமுவின் முதல் மனைவி வினோதா உள்ளிட்ட கொலை வழக்கு, பல்வேறு அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.

கடந்த 2019-ம் ஆண்டு வாஞ்சூர் பகுதியில் உள்ள மறைந்த தொழில் அதிபர் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மகன்கன் அஜேஸ் ராமு, சிவகாளி முத்து ஆகியோருக்கு சொந்தமான மதுபான கடையை கூலிப்படையினரால் மிரட்டி எழுதி வாங்கியுள்ளார். இது தொடர்பாக அஜேஷ் ராமு மற்றும் சிவகாளிமுத்து ஆகியோர் திரு-பட்டினம் போலீசில் புகார் அளித்தனர்.

கொலை மிரட்டல்

அதன்பேரில், பெண் தாதா எழிலரசி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த எழிலரசியை கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி, கடந்த 2 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவந்தார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கூலிப்படையினரை கொண்டு சிவகாளிமுத்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் பாதுகாப்பு

கொலை மிரட்டல் விடுத்தை தொடர்ந்து நிரவி 2-வது சாலையில் உள்ள சிவகாளிமுத்து வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்