சமையல் கலை கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயம்

புதுவை ஓட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கலை கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-08-22 22:20 IST

புதுச்சேரி

புதுவை முருங்கப்பாக்கத்தில் புதுவை ஓட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இந்த கல்லூரியில் பி.எஸ்.சி. படிப்புக்கான கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கல்விக்கட்டணம், தேர்வுகட்டணம், வைப்புத்தொகை முதலாம் பருவத்துக்கு ரூ.68 ஆயிரத்து 850-ம், 2-ம் பருவத்துக்கு ரூ.51 ஆயிரத்து 950, 3, 4-வது பருவத்துக்கு ரூ.52 ஆயிரத்து 950, 5, 6-வது பருவத்துக்கு ரூ.58 ஆயிரத்து 950 என கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக ரூ.30 ஆயிரத்தை வருகிற 28-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் விஜயநம்பி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்