புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய திருவிழா

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-10-13 16:18 GMT

காரைக்கால்

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

காரைக்கால் பெரியபேட் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவையொட்டி, காரைக்கால் செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பீட்டர் பால், கொடிக்கு மந்திரிப்பு செய்து, கொடிக்கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

தேர்பவனி

விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார்கள் சின்னப்பன், ஆல்பர்ட் ரமேஷ், சிம்சன் பாப்பு, வில்லியம் டார்லிங் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

நாளை (சனிக்கிழமை) பெரிய தேர்பவனியும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொடியிறக்கமும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்