மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை

காரைக்காலில் மகன் கண்டித்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-23 15:51 GMT

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி அக்கரைவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 48). இவர் காரைக்காலில் உள்ள தனியார் கடை ஒன்றில் எல்க்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி வித்யா. இவர்களுக்கு ராஜசேகரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜசேகரன் கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்