குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.;
காரைக்கால்
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு சார்பில், வருகிற 17-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை சிறப்பு குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் நவீன முறையில் பெண்களுக்கான் லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது.
எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.