மின் சேமிப்பு, இயற்கை எரிசக்தி விழிப்புணர்வு ஊர்தி
காரைக்காலில் மின் சேமிப்பு, இயற்கை எரிசக்தி குறித்து விழிப்புணர்வு ஊர்தி தொடங்கி வைக்கப்பட்டது.;
காரைக்கால்
புதுச்சேரி புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை, மத்திய மின் அமைச்சகத்தின் பங்களிப்புடன், காரைக்காலில் மின் சேமிப்பு, இயற்கை எரிசக்தி குறித்து விழிப்புணர்வு ஊர்தி தொடங்கி வைக்கப்பட்டது. இதை கலெக்டர் முகமது மன்சூர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன், மின்துறை உதவி பொறியாளர் அனுராதா, புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை தொழில்நுட்ப உதவியாளர் குமரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக காரைக்காலில் உள்ள மின் மற்றும் மின்னணு வீட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு, மின்சக்தி திறன் மற்றும் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடந்தது. இதில் அரசுத் துறை அதிகாரிகள், காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.