எலக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை
கோட்டுச்சேரியில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால்
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி அண்ணாநகரில் வசித்து வருபவர் அருண்பிரசாத் (வயது 41). எலக்ட்ரீசியன். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதனால் அவரை மனைவி மற்றும் உறவினர்கள், போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அருண்பிரசாத்தால் மது பழகத்தை கைவிட முடியவில்லை. இந்தநிலையில், நேற்று அவரது மனைவி சாந்தி வேலை விசயமாக சென்றுவிட்டு வீடு திரும்பியபோது அருண்பிரசாத் வீட்டில் இல்லை. எங்காவது போய் இருப்பார் என கருதிய நிலையில் அடுப்பங்கரை ஓரம் அருண்பிரசாத் தூக்கு போட்டு இறந்ததை கண்டு சாந்தி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், அருண்பிரசாத் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.