மரக்காணம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே அண்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜான்பாண்டி (வயது 28). இவர் மரக்காணம் அருகே ஆலப்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள தனியார் ஓட்டலில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இதற்காக அருகில் உள்ள மண்டவாய் புதுகுப்பத்தில் ஜான்பாண்டி வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் 2 பேர் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் ஜான்பாண்டி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தங்கியருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.