தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.;

Update:2023-08-05 21:55 IST

புதுச்சேரி

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

கலெக்டர்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. குறிப்பாக வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்வது போன்ற பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன.

புதுவையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர். புதுவை எம்.பி. தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி பொறுப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த பதவியில் புதுவை மாவட்ட கலெக்டரே தொடர்கிறார்.

நகராட்சி ஆணையர்கள்

அதே நேரத்தில் கலெக்டர் அலுவலக சிறப்பு பணி அதிகாரி வகித்து வந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி பொறுப்பு துணை கலெக்டர் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுவை, உழவர்கரை நகராட்சி ஆணையர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதுவை நகராட்சி ஆணையர் முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதி தேர்தல்களை நடத்தும் அதிகாரியாகவும், காமராஜ் நகர், லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதி தேர்தல்களை நடத்தும் அதிகாரியாக உழவர்கரை நகராட்சி ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் இந்த தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக சுற்றுலா மற்றும் தொழில்துறை இயக்குனர்கள் கவனித்து வந்தனர்.

தேர்தல் கமிஷன் ஒப்புதல்

துணை கலெக்டர் (வடக்கு) அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தேர்தல் கமிஷனும் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்