நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை

கோட்டுச்சேரி அருகே நோயின் கொடுமையால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-06-21 20:21 IST

கோட்டுச்சேரி

திரு-பட்டினம் போலகம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 79). இவர் கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு மற்றும் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைபெற்றும் நோய் குணமாகவில்லை.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அஞ்சம்மாள் ஜன்னல் கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அஞ்சம்மாளின் மருமகன் கருப்பையன் அளித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்