வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
வில்லியனூர் தொகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
வில்லியனூர்
பருவ மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் வில்லியனூர் தொகுதியில் பொதுப்பணித்துறை கோட்ட பிரிவு சார்பில் ஆத்துவாய்க்கால், கருப்பட்டி வாய்க்கால், மாதா கோவில், பாலாஜி நகர், ஒதியம்பட்டு, பெரம்பை வாய்க்கால், பெரியபேட் வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்கள் ரூ.10 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது. இந்த பணிகளை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.