பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

திருநகா் மாரியம்மன் கோவில் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.;

Update: 2023-09-15 17:36 GMT

காரைக்கால்

காரைக்கால் நகர் பகுதியான திருநகர் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காரைக்கால் மதகடி உஜ்ஜய்னி மகாகாளியம்மன் கோவிலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்