டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

வித்யாபவன் பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;

Update:2023-09-23 22:46 IST

புதுச்சேரி

புதுவை தேங்காய்த்திட்டில் உள்ள வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பள்ளியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அம்பேத்கர் சாலை, முதலியார்பேட்டை, கடலூர் சாலை, மரப்பாலம் வழியாக சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் டெங்கு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்