டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

அரும்பார்த்தபுரத்தில் புளூ ஸ்டார்ஸ் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-09-13 16:33 GMT

புதுச்சேரி

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் புளூ ஸ்டார்ஸ் மேல்நிலைப்பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மெய்வழி ஜெ.ரவிக்குமார் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பள்ளியின் முதல்வர் வரலட்சுமி ரவிக்குமார், டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்கி பேசினார். பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம் வாழ்த்துரை வழங்கினார்.

ஊர்வலத்தில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்துகொண்டு அரும்பார்த்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்ச்சல் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வீரமுத்து, கலைச்செல்வி, தேசிய மாணவர் படை அலுவலர் கரிகால்வளவன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்