சுடுகாட்டிற்கு பாலம் கேட்டு ஆர்ப்பாட்டம்
பாகூர் அருகே சுடுகாட்டிற்கு பாலம் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
பாகூர்
பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளன்சந்தை கிராமங்களுக்கான சுடுகாடு தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாலம் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு வெள்ளப் பெருக்கின் காரணமாக இடிந்து விட்டது. இதுவரை அந்த பாலம் சீரமைக்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை மழை காலங்களில் வெள்ள நீரில் நீந்தி சென்று தான் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கண்ட 3 கிராமங்களுக்கான சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தர வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குருவிநத்தம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கிளை செயலாளர் கலியன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வளர்மதி, கமிட்டி உறுப்பினர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரபுராஜ், தி.மு.க. தொகுதி செயலாளர் ஹரிகிருஷ்ணன், காங்கிரஸ் வட்டார தலைவர் கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.