இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்

புதுவை புதுசாரம் ஜெயராம் நகர் பகுதியில் இளம்பெண்னுக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-08 15:47 GMT

புதுச்சேரி

புதுவை புதுசாரம் ஜெயராம் நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சவுமியா (வயது 25). ஐ.டி. ஊழியரான இவருக்கும் சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த கோகுல் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மேலும் காஞ்சீபுரம் நீதிமன்றத்திலும் விவகாரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே கோகுல், சவுமியா குடும்பத்தாருக்கு சமூக வலைதளங்கள் மூலமாக மிரட்டல் விடுத்தாராம். இந்தநிலையில் நேற்று புதுவை வந்த கோகுல் சவுமியாவின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்.

இது குறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் கோகுல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்